×

அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவசாயிக்கு 4 ஆண்டு சிறை

நாமக்கல், மார்ச் 12: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி அம்மாசி (50). இவர் கடந்த 2010ம் ஆண்டு, மதியம்பட்டியில் இருந்து அக்கரைபட்டிக்கு செல்லும் அரசுக்கு சொந்தமான வாய்க்கால் கரையை வெட்டி, தன்னுடைய நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து, ராசிபுரம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக இருந்த உமா மகேஸ்வரி, வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் அம்மாசி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அம்மாசிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ₹7 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : jail ,state land ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்