×

கிருஷ்ணகிரி அணையின் 6 மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 12:கிருஷ்ணகிரி அணையின் 6 மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் பிரதான 8 மதகுகளில் முதல் மதகு, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடைந்தது. உடைந்த மதகை அகற்றி விட்டு, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி புதிய மதகு பொருத்தப்பட்டது. இதையடுத்து, ₹19 கோடி மதிப்பில் மற்ற 7 மதகுகளும் புதியதாக மாற்றப்படுகின்றன. இதற்காக பழைய 7 மதகுகளை அகற்றி, கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதில் மதகின் 2 பக்கத்திலும் 8 ரோலர்கள் பொருத்தப்பட்டு, மதகின் 3 கியர் பாகங்களையும், 4 மேல் பாகங்களையும் வைத்து, அவற்றின் குறுக்கே 5 கேடர்களை வைத்து இணைக்கின்றனர். இப்பணிகள் அனைத்தும் முடிந்து இணைப்பு பாகம் முழுவதும் வெல்டிங் வைக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதம் 15ம் தேதி வரை 2, 3, 4 மற்றும் 7, 8வது மதகுகள் என ஐந்து மதகுகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தன. கடந்த 2ம் தேதி வரை, 5 மற்றும் 6வது மதகுகள் பொருத்தும் பணிகள் துவங்கின. நேற்று வரை 6 மதகுகள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன. நேற்று 5வது மதகின் கீழ் பாகத்தைப் பொருத்தி உள்ளனர். மற்ற 6 மதகுகளுக்கும் வெல்டிங் வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில், நேற்று 26 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 52 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து திரும்பிய
தம்பதி தொடர் கண்காணிப்புகிருஷ்ணகிரி, மார்ச் 12:ஜப்பான் நாட்டில் வேலை செய்து வந்த தம்பதியினர், சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் திரும்பினர். அவர்கள் வயிறு  எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக  கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...