×

நகராட்சி அலுவலகம் அருகே பயன்பாடின்றி இருக்கும் சுகாதார வளாகம்

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே பராமரிப்பின்றி இருக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே, வாசு கவுண்டர் தெருவில் பல்வேறு நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், இது பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும், அந்த சுகாதார வளாகம் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அசுத்தமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : complex ,office ,
× RELATED பொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான...