×

விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தக்காளி சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

தர்மபுரி, மார்ச் 12: தக்காளி விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தக்காளி சாகுபடியாளர்களுக்கு, ஏக்கருக்கு குறைந்த பட்சமாக ₹25 ஆயிரம் இழப்பீட்டை மாவட்ட நிர்வாகம்  வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன், டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி வரும் 20ம் தேதி நடைபெறும் பேரணி குறித்து விளக்கி  பேசினார். கூட்டத்தில் டெல்லி நாடளுமன்றத்தி நோக்கி நடைபெறும் பேரணியில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள தக்காளி சாகுபடியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் ஏக்கருக்கு குறைந்த பட்சமாக ₹25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் வணிகவியல், கணிதம், விலங்கியல் ஆகிய பாடங்களில் 1,117 பேர் தேர்வு எழுத வரவில்லை. அவர்களை தேர்வு எழுத வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின், பேரவைக் கூட்டங்கள் சங்க விதி முறைப்படி நடக்காதது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ராஜகோபால், முருகேசன், பச்சாகவுண்டர், மாதையன், சாக்கன், சாரதா, முருகன், சரவணன், மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tomato growers ,
× RELATED போதிய விலை இல்லாததால் செடியிலே...