×

வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு


தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலராக தாமோதரன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு தர்மபுரிக்கு வந்துள்ளார். தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய செந்தில்வேலன், வேலூருக்கு மாற்றப்பட்டார். புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரனுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Regional Transport Officer ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை நீக்கம்