×

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

பாப்பாரப்பட்டி, மார்ச் 12: பாப்பாரப்பட்டியை அடுத்த மாமரத்துபள்ளம் அரசு கல்லூரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, பென்னாகரம் அரசு மருத்துவமனை சார்பில், ரத்த வங்கி குழு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாகதாசம்பட்டி இணைந்து மாமரத்துப் பள்ளம் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த், பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார், செந்தில் முருகன், கல்லூரி முதல்வர்  செல்வ விநாயகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Rattana Camp ,Government College ,
× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...