×

சிவகாசி கல்லூரியில் கலை, விளம்பர நாடக போட்டி

சிவகாசி, மார்ச் 12: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் அறிவியல் தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரிகளுக்கு இடையே கலை மற்றும் விளம்பர நாடக போட்டி நடைபெற்றது. மாணவி வைஷாலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இப்போட்டியில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த இயற்பியல் துறை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை சாத்தூர் ராமசாமி நாயுடு கல்லூரி வென்றது. முடிவில் மாணவி ஜானகி நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர், உதவி பேராசிரியர்கள், மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags : Sivakasi College ,
× RELATED சிவகாசி கல்லூரியில் ஒலிம்பிக் தினம்