×

மாணவர்களுக்கு பரிசு

திருவில்லிபுத்தூர், மார்ச் 12: திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா நடைபெற்றது. தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முருகேசன் முன்னிலை வகித்தார். துணைமுதல்வர் லிசா ஜெயராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ சந்தி பிரபா முத்தையா பரிசு வழங்கி பாராட்டினார். டாக்டர் சண்முக லட்சுமி மற்றும் ராஜபாளையம் பேபி ட்ரெயின் கல்வி நிறுவனர் கல்யாணி பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சுகந்தி நன்றி கூறினார்.

Tags :
× RELATED விகேசி நிறுவனம் சார்பில் கொரோனா...