×

வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வத்திராயிருப்பு, மார்ச் 12: வத்திராயிருப்பில் கிரீன்பீல்ட்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிறுவனர் பெரியமகாலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய அறிவியல் இயக்க செயலாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயக்கொண்டம்மாள் வரவேற்றார். மாவட்ட அறிவியல் இயக்கச் செயலாளர் கண்ணன் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஒன்றிய துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் அறிவொளி முருகன் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழை ஒன்றிய துளிர் இல்ல தலைவர் முத்துப்பாண்டி வழங்கினார்.

அறிவியல் கண்காட்சியில், விவசாயத்தினால் ஏற்படும் நன்மைகள், இன்றைய நடைமுறையில் இயற்கை விவசாயம், மாசுக் கட்டுப்பாடு, தண்ணீா் சேமிக்கும் வழிமுறைகள், தற்கால பூமி, எதிர்கால பூமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர். அறிவியல் கண்காட்சியை பெற்றோர்கள் மற்றும் இதர பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டு மாணவர்களின் ஒவ்வொருவரும் செய்திருந்ததை பார்த்து வியந்து பாராட்டினர். ஆசிரியா் நல்லதாய் நன்றி கூறினார்.

Tags : Science Exhibition ,Vattarayipuram School ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி