×

நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா

திருவில்லிபுத்தூர், மார்ச் 12: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்து சாரதா தலைமை வகித்தார். நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, பரிமளா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நீதிபதி முத்து சாரதா பேசுகையில், ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விருதுநகர் மாவட்டத்தில் புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் விட்டு கொடுத்து சென்றால் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க முடியும்’’ என தெரிவித்தார். தொடர்ந்து உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா பரிசு வழங்கினார். விழாவில் நீதிபதி சரண், சார்பு நீதிபதிகள் மாரியப்பன், சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தி, நீதிபதிகள் சந்திரகாச பூபதி, பரம்வீர், பெண் வழக்கறிஞர்கள், காவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.

Tags : Women's Day ,Court Complex ,
× RELATED மகளிர் தின விழா கொண்டாட்டம்