×

100 சதவீத மானியத்தில் தக்காளி, பீட்ரூட் விதை

கம்பம், மார்ச் 12: தேனி மாவட்டம் கம்பம் வட்டாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி மற்றும் பீட்ரூட் விதைகளை 100 சதவீத மானியத்தில் பெறலாம் என கம்பம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். தேசிய தோட்டக்கலை திட்டம் மற்றும் கஜா சிறப்பு திட்டத்தின் கீழ் தக்காளி மற்றும் பீட்ரூட் விதைகள் தோட்டகலைத்துறை சார்பில் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தக்காளி ஹெக்டேருக்கு 200 கிராம் என்ற அளவிலும், பீட்ரூட் 3.400 கிலோ என்ற அளவிலும் விவசாயிகளுக்கு விநியோகம்  செய்யப்படுகிறது. இதேபோல் மிளகாய் மற்றும் கத்தரி நாற்றுகளும் இத்திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு ஹெக்டர் அளவிற்கு வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் இரண்டுடன் விண்ணப்பம் செய்யுமாறு கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...