×

உத்தமபாளையம்-தேவாரம் வழித்தடத்தில் புதிய பஸ்களை இயக்க ேவண்டும் பயணிகள் வலியுறுத்தல்

உத்தமபாளையம்,  மார்ச் 12: தேவாரம்-உத்தமபாளையம் பகுதியில் இயக்கப்படும் அரசுபஸ்களில் பராமரிப்பு குறைவால் பயணிகள் திண்டாடுகின்றனர். தேவாரத்தில் இருந்து பண்ணைப்புரம், கோம்பை, கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினந்தோறும் அதிகளவில் பயணிகள் செல்கின்றனர். இந்த பஸ்களின் உள்புறம் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் தினந்தோறும் பயணிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சீட்களில் ஆணிகள் நீட்டிக்கொள்வதும், படிக்கட்டுகளின் தகரங்கள் கூர்மையாக உள்ளதால் உடலில் காயங்கள்படுவது ஒருபுறம் என்றால் மறுபுறம் உள்புறம் சுத்தம் செய்யப்படாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கம்பம், தேவாரம் டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் இத்தகைய பஸ்களால் பயணிகள் பெரும் பாதிப்பினை சந்திக்கின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் பஸ்களில் ஏறினால் உள்புறம் சுழன்றடிக்கும் தூசிகள் மனிதஉடலில் தானே மையம் கொண்டு அலர்ஜி, சளி, கண்பாதிப்பு போன்றவற்றை தருகிறது. தனியார் பஸ்கள் போட்டிபோட்டு பஸ்களை பராமரித்து இயக்கும்போது அரசுபஸ்களில் என்ன காரணத்தினால் இப்படி இயக்கப்படுகிறது என்ற காரணம் தெரியவில்லை. தினந்தோறும் டவுன்பஸ்களை உள்புறம் சுத்தம் செய்து பராமரிப்பதற்கென்றே பணியாளர்கள் உள்ளனர். இதற்காக சம்பளம் அதிகளவில் தரப்படுகிறது. ஆனால் டெப்போக்களில் இந்தபணிகளில் எதற்காக சுணக்கம் காட்டப்படுகிறது என்ற விபரம் தெரிவதில்லை.

அரசுபஸ்களை நம்பி ஏறும் பயணிகளுக்கு தூசி மண்டலத்தை தருவது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, பாளையம்-தேவாரம் வழித்தடங்கள், போடிக்கு இயக்கப்படும் அரசுபஸ்கள் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் உள்ளே உட்காரமுடியவில்லை. இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிக வசதியுடன் இயக்கப்படுவதாலும், பொதுமக்கள் தனியார் பஸ்களை நோக்கித்தான் காத்துகிடந்த பின்பு ஏறுகின்றனர். எனவே இதுபோன்ற அரசுபஸ்கள் இயக்கப்படவேண்டும் என்றனர்.

Tags : passengers ,Uthamapalayam-Devaram ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...