×

புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்பு

தேனி, மார்ச் 12:  தேனியில் நடந்த பள்ளிவிழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்தார். தேனி அருகே வடபுதுப்பட்டியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கல்விநிலையங்கள் உள்ளன. இதில் பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன் வரவேற்றார். 
இவ்விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவதன்மூலம் காமராஜரை போல நல்லாட்சியை தரமுடியும். தமிழகத்திற்கு கோதாவரி தண்ணீர் கொண்டு வர தமிழக முதல்வரும் தெலுங்கானா முதல்வரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கு முழு பக்கபலமாக நான் இருப்பேன் என்றார். இவ்விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், நாடார் உறவின்முறைக்கு உட்பட்ட பல்வேறு கல்விநிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து நாடார் உறவின்முறை பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

Tags : Governor ,Telangana ,opening ,Tamilnadu ,school buildings ,
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்