×

கமுதி அருகே அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கமுதி, மார்ச் 12:  கமுதி அருகே முத்தாலங்குளத்தில் நுப்பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கமுதி அருகே முத்தாலங்குளத்தில் சக்தி விநாயகர் கோவில் நுப்பிடாரியம்மன் கோவில், நிறைகுளத்து அய்யனார் கோவில் கருப்பணசாமி கோவில் போன்ற ஆலயங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முத்தாலங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : ceremony ,temple ,Amman ,Kamuthi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...