×

அரசு ஊழியர் விளையாட்டு யோகாவில் ஈடுபட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 12:  அரசு ஊழியர்கள் விளையாட்டு, யோகாவில் ஈடுபட வேண்டும் என கலெக்டர் பேசினார். சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2019-2020ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் பணியாளர்கள் தங்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தி செயலாற்ற வேண்டும் என்பதாகும். தற்போது ஒரு மணி நேரம் கூட விளையாட்டிற்கு ஒதுக்குவதில்லை. ஓவ்வொருவரும் தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டு மற்றும் யோகாவில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்வது போல் தங்களுக்கு ஏதுவான விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும்.

அதன் மூலம் ஒரே நிலையான உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முடியும். மாவட்ட அளவிலான நடத்தும் விளையாட்டுப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற நிலை குறித்து சிந்திக்க வேண்டாம். கலந்து கொண்டாலே வெற்றி பெற்றோருக்கு நிகரானவர்கள் தான். இவ்வாறு பேசினார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், பயிற்றுநர்கள் கார்த்திகேயன், பால்பாண்டி, ஆறுமுகம், மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் அபுதாகிர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Tags : Collector ,servant ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...