×

கமுதியில் மகளிர் தின விழா

கமுதி, மார்ச் 12: கமுதியில் சர்வதே மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கமுதி கோட்டைமேட்டில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் டி.ஆர்.ஆர்.எம். தொண்டு நிறுவனம் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா நடத்தினர். விழாவிற்கு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவரும், வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமாகிய முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன மேலாளர் மோகன பிரியா வரவேற்றார். இதில் திட்ட இயக்குநர் கருப்பசாமி திட்ட விளக்கத்தை கூறினார்.

விழாவில் முதன்மை மருத்துவ அலுவலர் விஜயா, அரசு சித்த மருத்துவர் தேவி பிரியா, வழக்கறிஞர் பஞ்சு, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, அரசு மருத்துவமணை கண்காணிப்பாளர் தனலெட்சுமி ஆகியோர், கமுதி ஒன்றியத்தில் உள்ள குழந்தைகளை இடைநிறுத்தம் இல்லாமல் படிக்க வைக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தடை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக ஏற்படக்கூடிய அநீதிகளை தடுக்க வேண்டும் என்று பேசினர்.  இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்து நன்றி கூறினார்.

Tags : Women's Day Ceremony ,
× RELATED நாகை பாப்பாகோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் மகளிர் தின விழா