×

சந்தையின் நுழைவு வாசலில்

கமுதி, மார்ச் 12:  கமுதியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை சந்தை கூடுவது வழக்கம். சுற்று வட்டாரத்தில்  100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர், சந்தைக்கு வந்து தேவையான பொருள்களை வாங்கி செல்வது வழக்கம். சந்தை பேட்டையின் நுழைவு வாசலில், கழிவுநீர் வாறுகால் மேலே போடப்பட்ட பாலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் வயதானவர்கள் பலர் தவறி விழுந்து பலத்த காயங்களுடன் செல்கின்றனர். சிறு குழந்தைகள் தவறி விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது. சந்தையில், பொருட்களை வாங்கிக் கொண்டு வருபவர்கள், பள்ளம் இருப்பதை கவனக்காமல் கீழே விழுந்து பொருட்களை கீழே கொட்டிச் செல்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இதனை உடன் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED மூகூர்த்த நாளான நேற்று குன்றம் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்