×

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ராமநாதபுரம், மார்ச் 12:  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜவேணி, வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார் சபிதாபேகம், ஒன்றிய பொறியாளர் லியோ ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க திமுக ஆட்சியில் கொண்ட வரப்பட்ட காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Panchayat Union Committee Meeting ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...