×

மேலூர் அருகே கோயிலில் பூக்குழி திருவிழா

மேலூர், மார்ச் 12: மேலூர் அருகே திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள திருவாதவூரில் நூற்றாண்டை கடந்த பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இக்கோயில் திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்காக பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருப்பார்கள். தொடர்ந்து 18 நாட்கள் பாஞ்சாலி சபதம் குறித்த நிகழ்வுகளை இக்கோயிலில் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய அங்கமாக பூக்குழி திருவிழா நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது.

கோயில் முன்பு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட குழியில் புதிதாக வெட்டிய பச்சைமரங்கள் 100 டன் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் பக்தர்களும் தங்கள் பங்கிற்கு விறகுகளை கொண்டு வந்து இதில் போட்டிருந்தனர். நெருப்பு பந்தாக இருந்த இந்த பூக்குழியில் விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலூர், திருவதாவூர், உலகுபிச்சான்பட்டி, வெள்ளமுத்தான்பட்டி, பழையூர், மாணிக்கம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Tags : Pookkali ,festival ,temple ,Melur ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!