×

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி

மேலூர், மார்ச் 12: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலூர் அருகே கரையிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நோபல் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் செய்முறை சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை தவமணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கிருத்திகா பாரதி, மகேஸ்வரி, கணேசன், பழனியம்மாள், முருகேஸ்வரி, ரெக்ஸ் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியை நோபல் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் செய்து காண்பித்தார். இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags : government school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...