×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் திடீர் சாலை மறியல் மதுரையில் இரவில் பரபரப்பு


மதுரை, மார்ச் 12: குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை எனக்கூறிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து மதுரையில் நேற்றிரவு முஸ்லிம்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த பிப்.14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 27வது நாளாக அங்கு போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று இரவு, க்ரைம்பிராஞ்ச் மகளிர் காவல் நிலையம் முன்பு, திடீரென முஸ்லிம் அமைப்பினர் திரண்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ேகாஷங்களை எழுப்பியவாறு நடுரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட இஸ்மாயில் என்பவர் கூறுகையில், ``குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில்தான் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை என்று கூறியதால் இரவில் மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்று கூறினார்.

Tags : Muslims ,
× RELATED நாளை ரம்ஜான் பண்டிகை...