×

பழநி கோயில் ஒப்பந்த பணியில் 10 சதவீதம் வாய்ப்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழநி, மார்ச் 12: பழநி கோயில் ஒப்பந்த பணியாளர்களில் 10 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பழநி கோயில் அலுவலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில், ‘தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு அறநிலையத்துறையால் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பெறப்பட்டு பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல், பஞ்சாமிர்த விற்பனை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் நியமிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள், பஞ்சாமிர்தம் தயார் செய்யுமிடம், முடி காணிக்கை செலுத்துமிடம் போன்ற இடங்களில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு