×

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் பணியிடம் விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி திண்டுக்கல், மார்ச் 12: திண்டுக்கல் மாவட்டத்தில்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளார் பணிக்கு மார்ச் 24ம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சமூக நலம் பாதுகாப்பு துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள பாதுகாப்பு திட்டம் கீழ் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கணக்காளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. திண்டுக்கல் சமூக நலம் பாதுகாப்பு துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள பாதுகாப்பு திட்டத்தில் ஒரு கணக்காளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ. 14,000மும், கல்வி தகுதி பி.காம் அல்லது எம்.காம் (10+2+3)

கல்வி பயின்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்காளாராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பத்தார்களுக்கு. மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் 24.03.2020ம் தேதிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்:4, 2வது குறுக்கு தெரு (மாடி) எஸ்.பி.ஆர் நகர், கலெக்ரேட் (அஞ்சல்) திண்டுக்கல்-624004 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு dcpudgl119@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரி அல்லது 0451-2460725 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...