×

வத்தலக்குண்டு அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேர் கைது 4 பேருக்கு வலை

வத்தலக்குண்டு, மார்ச் 12: வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டியில் வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதுரை வீரன், சுரேஷ். இவர்கள் கோயில் அருகே 8 வைக்கோல் படப்புகள் வைத்திருந்தவர். மேலும் அதனருகில் 2 குடிசைகளில் ஆடு, மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 9ம் தேதி மர்மநபர்கள் வைக்கோல் படப்புக்கு தீ வைத்தனர். அதில் 8 வைக்கோல் வைக்கோல் படப்புகள் மட்டுமின்றி அருகிலிருந்த 2 குடிசை வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ரெட்டியாபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (39), மங்களதுரை (37) ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் ராஜபாண்டி, ரமேஷ், அஜீத், டென்னிஸ் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Wattalakundu ,
× RELATED சரக்கு வாகனத்தில் தீ