×

கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு 100 நாள் வேலை திட்டத்தை துவங்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்

அரியலூர், மார்ச் 11: நூறு நாள் வேலை திட்டத்தை துவங்ககோரி அரியலூர் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை துவங்ககோரி அரியலூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சிபிஐஎம் மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட தலைவர் சவுரிராஜன் முன்னிலை வகித்தனர்.

சிஐடியூசி மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட தலைவர் பாக்கியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் தொடர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 250 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்ட இறுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Collector ,speech ,seminar ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...