×

தமிழில் வெளியிட மக்கள் வலியுறுத்தல் பூமிக்கு நம்மால் ஏற்படும் துன்பத்தை போக்க பண்டையகால வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்

பெரம்பலூர், மார்ச் 11: பூமிக்கு நம்மால் ஏற்படும் துன்பத்தை போக்கும் வகையில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பண்டையகால வாழ்க்கை முறையை மேற்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டுமென பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் சாந்தா பேசினார்.மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றல் குறித்து மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி பயன்படுத்திய மின் கழிவு பொருட்கள் மற்றும் மின் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தி, புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் செயல்முறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்களை, முறையாக வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மின்னணு கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பேசியதாவது: பூமிக்கு நம்மால் ஏற்படும் துன்பத்தை போக்கும் வகையில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பண்டையகால வாழ்க்கை முறையை மேற்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மின்னணு கழிவு மேலாண்மை விதிகள், அவற்றை நடமுறைபடுத்துவதன் அவசியம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளர்கள் மூலமாக கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்து.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், சுற்றுச்சூழல் பொறியாளர் நளினி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : suffering ,earth ,
× RELATED விலைவாசி உயர்வால் மக்கள் அவதி: பிரியங்கா தாக்கு