×

ரூ.2.47 கோடி மதிப்பில் குடந்தை தீயணைப்பு நிலையத்துக்கு நவீன முறையில் புதிய கட்டிடம் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

கும்பகோணம், மார்ச் 11:
கும்பகோணம் கச்சேரி சாலையில் கோர்ட்டுக்கு பின்புறம் 1957ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது. நகரத்தின் மைய பகுதியில் கோர்ட், கருவூலம், அரசு மருத்துவமனை, வருவாய்த்துறை அலுவலகம், கோட்டத்துக்கான வரைபடம் ஆவண அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் அப்பகுதியில் அமைந்திருந்ததால் அதன் அருகே தீயணைப்பு நிலையத்தை அமைத்தனர்.இதனால் நகர பகுதியில் ஏதேனும் தீவிபத்து என்றாலோ, கிராம பகுதிகளில் ஏதேனும் தீ விபத்து என்றாலோ உடனடியாக சென்று சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் பெரும் அசம்பாவித சம்பவங்களை தவிர்த்து வருகின்றனர். மேலும் காவிரி, அரசலாறு, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தும், ஆற்றில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை காப்பாற்றும் பணியை தீயணைப்புத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால் அலுவலர்கள் பெரும் சிரமத்துடன் பணியாற்றி வந்தனர். இதையடுத்து வேறு வழியின்றி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தங்களது சொந்த செலவில் கட்டிடத்தை சீரமைத்து வந்தனர். பின்னர் தீயணைப்பு நிலைய கட்டிடத்தின் நிலை குறித்து தெரிவித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென தமிழக அரசுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி தமிழ்நாடு காவல்துறை வீ்ட்டுவசதி கழக நிர்வாகத்தின்கீழ் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பில் நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டும் பணி துவஙகியது. தற்போது பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளதால் தற்காலிகமாக ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருநாராயணபுரம் தெருவில் உள்ள டான்சி தொழிற்சாலை இருந்த பகுதியில் இயங்கி வருகிறது.
புதிதாக கட்டப்படும் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகளுக்கு என அலுவலகம், 3 தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்த தனித்தனி பகுதிகள், நவீன கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு வீரர்களுக்கு என ஓய்வறை, சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. கடநத சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம் கட்டிடம் கட்டும் பணி ஓராண்டுக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : building ,fire station ,
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...