×

மாசிமக திருவிழாவையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதியுலா

பெரம்பலூர், மார்ச் 11: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பிரம்மபுரிஸ்வரர் கோயில் மாசிமக பெருந்திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் கடந்த 26ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி 29ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனம், யானை வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதியுலா, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. 6ம் தேதி தேர் முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 8ம் தேதி தேரோட்டம், 9ம் தேதி திருவிழா கொடியிறக்கம், தீர்த்தவாரி நடந்தது.இதைதொடர்ந்து நேற்று பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கென 2019 இறுதியில் ரூ.25 லட்சத்திற்கு மேலான மதிப்பில் தயாரிக்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மணி முன்னிலையில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (12ம் தேதி) மஞ்சள் நீர் விடையாற்றியுடன் விழா முடிவடைகிறது.

Tags : Swami Veediyula ,festival ,Brahmapureeswarar ,Masimaga ,
× RELATED திருக்குறுங்குடி கோயிலில் உறியடி உற்சவம்