×

உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் சங்க கூட்டம்

ஜெயங்கொண்டம், மார்ச் 11: உடையார்பாளையத்தில் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் விருத்தகாசி தலைமை வகித்தார். சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் அண்ணாமலை அறிக்கை வாசித்தார். பொருளார் சிங்காரவேலு, பெரியசாமி, ஆறுமுகம், மாரிமுத்து, கோவிந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் சையத் அலி தீர்மானங்களை விளக்கி பேசினார்.கூட்டத்தில் 2016ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவால் வழங்கப்படாமல் விடுப்பட்ட 21 மாத நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.1,000மாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதித்தை ரூ.9,000மாக உயர்த்தி வழங்க வேண்டும். பே மேட்ரிக்ஸ் முறையை தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்தி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க வேண்டும்.ஓய்வூதியர் மறைவுக்கு பின் வாரிசுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கனகசபாபதி வரவேற்றார். துணைத்தலைவர் பெரியசாமி நன்றிகூறினார்.

Tags : meeting ,India Senior Citizens Association ,Udaiyarpalayam ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்