×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி புதுகை அரசு மருத்துவமனையில் பயோ மெட்ரிக் வருகை பதிவு ரத்து

புதுக்கோட்டை, மார்ச் 11: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உலகம் முழுவதும் கொரோனா நோய் அதி வேகமாக பரவி வருகிறது.தமிழகத்திலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு பயோமெட்ரிக் பதிவு முறையை ரத்து செய்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. இதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (நேற்று) முதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அச்சம் நீங்கிய பிறகு மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை தொடங்கப்படும். அதுவரை வருகைப் பதிவேட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தினந்தோறும் கையெழுத்து இட்டு செல்ல வேண்டும் என்றார்.

Tags : Revocation ,Visit ,Government Hospital ,
× RELATED சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழப்பு