×

தடுப்பணை கட்ட கோரிக்கை நூறுநாள் வேலையை முழுமையாக அமல்படுத்த கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

நாகை, மார்ச்11: நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாநில தலைவர் லாசர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாட்களை 250 நாளாக உயர்த்தி தினக்கூலியை ரூ.600ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.திட்டத்தை சிதைக்காமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் நாகை மாலி, ஸ்டாலின், துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Indian ,implementation ,
× RELATED இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை தொடங்கியது இந்தியன் ரயில்வே