×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

கொள்ளிடம், மார்ச் 11: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கொள்ளிடம் தைக்காலில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் தைக்காலில் துளசேந்திரபுரம் தைக்கால் ஜமாத் இஸ்லாமியக் கூட்டமைப்பு சர்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் ஷேக்தாவுது தலைமை வகித்தார். துளசேந்திரபுரம் காதரியா பள்ளி வாசல் மூத்தவல்லி ஹபிபுர்ரகுமான் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதின் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் தாஜிதீன் முன்னிலை வகித்தனர். நாகை சட்ட மன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன்அன்சாரி தலைமை கழக பேச்சாளர் பழனிபாருக், மாநில துணை பொதுச் செயலாளர் பாலாஜி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினர். முடிவில் முகமதுஜின்னா நன்றி கூறினார்.

Tags : General Assembly ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய...