×

கோவிலூர் பைபாஸ் ரவுண்டானாவில் நாச்சிக்குளத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, மார்ச் 11: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிச்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்குழு கூட்டம் கிளை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், பொருளாளர் ஹாஜா முகைதீன், துணைச் செயலாளர்கள் அசார், ஹாஜா மைதீன், அப்துல் ஹமீது, மாவட்ட வர்த்தகக் அணி நிர்வாகி ஜமால், மாவட்ட மருத்துவரணி நிர்வாகி தவ்பீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய கிளை தலைவராக ஷபீர், செயலாளராக அமீன், பொருளாளராக கமருதீன், துனைத்தலைவராக அபுபக்கர், துனைச்செயலாளராக மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தேசிய குடியுரிமை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என்பதை வலியுறுத்தி திருவாரூரில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்திற்கு கிளை சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது, கஜா புயலின் போது சேதமடைந்த நாச்சிச்குளத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்யவேண்டும், உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றம் அருகாமையில் நீர் தேக்க தொட்டி மற்றும் நாச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் உள்ள நீர் தேக்க தொட்டியை முழுமையாக அகற்றி புதிய நீர்தேக்க தொட்டியை கட்டி உனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் புதிய கிளை தலைவர் ஷபீர் நன்றி கூறினார்.

Tags : Dawheed Jama'at ,Kovilur Bypass Roundabout ,
× RELATED வாடாதவூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு