திருவாரூர் சிஏ ஹோண்டா ஷோரூமில் ஆக்டிவா, டியோ பிஎஸ் 6 புதிய வாகனங்கள் அறிமுகம்

திருவாரூர், மார்ச்11: திருவாரூர் சிஏ ஹோண்டா ஷோரூமில் ஹோண்டா ஆக்டிவா, டியோ பிஎஸ் 6 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில் நகர செயலாளர் வாரை பிரகாஷ், திருவாரூர் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, முன்னாள் நகர செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் நந்தகோபால், ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிறுவனர் கனகராஜ், முன்னாள் வர்த்தகர் சங்க துணை செயலாளர் தங்கதுரை, வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் பால்சன்ஸ் குமரேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

செயலாளர்கள் அண்ணாதுரை, ஜமால் முகமது, ஏசிஎன் கண்ணன், பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், முகமது ரியாஸ், செய்தி மக்கள் தொடர் அலுவலர் விஜய்ஆனந்த் மற்றும் கலை பிளக்ஸ்சிவா,வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் விழாவில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சிஏ ஹோண்டா ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories:

>