×

வார்டு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் மன்னார்குடி அரசு கல்லூரியில் மின்னணு கழிவு மேலாண்மை கருத்தரங்கு

மன்னார்குடி, மார்ச் 11: மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மின்னணு கழிவு மேலாண்மை கருத்தரங்கு நடைபெற்றது.மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு, நாகப்பட்டினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருவாரூர் தேசிய மாணவர் படை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரவி தலைமை வகித்தார். நாகை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜன், தாவரவியல் துறை தலைவர் பேரா சிரியர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னணு கழிவுகளின் உலகளாவிய நிலமை அதனை மேலாண்மை செய்தல் குறித்து தஞ்சாவூர் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராம் மனோகர், மின்னணு கழிவு தேசிய நிலமை, அதனை சரி செய்யும் விதம், மின்னணு கழிவு நீக்குதலில் தாவரங்கள் பங்களிப்பு பற்றியும் கல்லூரி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் முனைவர் ராமு, பாரதிதாசன் பல்கலைக் கழக பேரவை குழு உறுப்பினர்கள் சிவசெல்வன், ராஜசந்திரசேகர், வணிக மேலாண்மை துறை தலைவர் பிரபாகரன் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் கல்லூரி தேசிய பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை தேசிய பசுமை படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் தொகுத்து வழங்கினார்.முன்னதாக முனைவர் ஆகாஷ் வரவேற்றார். தேசிய பசுமை படை கல்லூரி மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் மேகவதி நன்றி கூறினார்.

Tags : Mannargudi Government College ,
× RELATED மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து...