×

திரளான பக்தர்கள் தரிசனம் தண்ணீர் வந்ததால் தடைபட்டிருந்த சுள்ளன் ஆறு பாலப்பணி மீண்டும் துவங்கியது

வலங்கைமான், மார்ச்11: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சுள்ளன் ஆற்றில் புதிய வண்டிப்பாலம் கட்டும் பணி, ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது பாலம் கட்டும் பணி துவங்கியது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சங்கலம் கிராமத்திற்கும் அதே ஊராட்சியை சேர்ந்த வேதாப்பரை கிராமத்தையும் இணைக்கும் விதமாக சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவிலான நடைபாலம் கட்டப்பட்டிருந்தது. இம்பாலம் முற்றிலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பாலத்தையே அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வந்தனர். மேலும் வேதாம்பரை பகுதியில் உள்ள விளை நிலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் வெள்ளக் காலங்களில் பாலத்தின் மிககுறுகிய கண்மாய்களில் வெங்காயத்தாமரை உள்ளிடவைகள் அடைத்து கொண்டு நீரின் திசையை மாற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

எனவே பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதியபாலம் கட்டித்தர பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இது தினகரனில் படத்துடன் செய்தியாக வந்தது. அதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் அப்போது சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிலையில் ஊராக வளர்ச்சித்துறை மூலம் சுள்ளன் ஆற்றில் ஆதிச்சமங்கலம்-வேதாம்பரை ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக நபார்டு திட்டத்திள் கீழ் சுள்ளன் ஆற்றில் சுமார் 40 மீட்டர் நீளத்துடன் ஏழரை மீட்டர் அகலத்துடனும் நபார்டு திட்டத்தின் கீழ் ஒரு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய வண்டிபாலம் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்றது. பாலம் கட்டும் பணியின் துவக்க நிலையிலேயே ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து புதிய பாலம் கட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் மீண்டும் பாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. சுமார் மூன்று மாத காலத்திற்குள் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்டுகின்றது.3 மாதத்தில் பயன்பாட்டிற்கு விட மும்முரம்

Tags : devotees ,darshan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...