×

வலங்கைமான் பகுதியில் வாகன சோதனையில் பைக் திருடர்கள் கைது

வலங்கைமான், மார்ச் 11: வலங்கைமான் பகுதியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபார்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டுபோவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் ஒரு பைக் ஒன்று காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வலங்கைமான் எஸ்.ஐ செந்தில் குமார் தலைமையில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வலங்கைமான் கடைவீதி பகுதியிலிருந்து தனித்தனியே இரண்டு பைக்குகளில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்களை வலங்கைமான் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் வலங்கைமான் அடுத்த தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகன்டன் (25), அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் பாலகிருஷ்ணன்(22) என தெரியவந்தது. அவர்கள் இருவரும் வலங்கைமான் மாரியம்மன் கோயில் பகுதியில் பைக்குகளை திருடிக்கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அர்களிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Bike thieves ,
× RELATED பைக் திருடர்கள் சிக்கினர்