×

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி ரயில்களின் ஏசி பெட்டிகளில் புதிய கட்டுப்பாடு

நாகர்கோவில், மார்ச் 11: ரயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற போர்வை, படுக்கை விரிப்புகள் போன்றவை ஒருவர் பயன்படுத்தியது மற்றவர்களுக்கு உடன் வழங்கப்படாத வகையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்புகள் போன்றவை கிருமிகள் ஒழிப்பு செய்யப்படும். ஒருவர் பயன்படுத்தியது மற்றவர்களுக்கு வழங்கப்படாது. இது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பயணிகளுடன் தொடர்பில் வருகின்ற பணியாளர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.

கோட்ட தலைநகரங்களிலும், முக்கிய ரயில் நிலையங்களிலும் ஐசோலேசன் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களையும் சேர்த்து இதற்காக மொத்தம் 130 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு டாக்டர் மேற்பார்வையில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்படும். திருவனந்தபுரம் கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கும், ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர், ரிசர்வேஷன் மையம், விசாரணை பிரிவு உள்ளிட்ட இடங்களில் பணியாளர்களுக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : AC ,Corona ,
× RELATED பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்...