×

நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 355 நாட்கள் சிறை

ஆவடி, மார்ச் 11: ஆவடி அடுத்த பட்டாபிராமில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 355 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  ஆவடி அடுத்த பட்டாபிராம், வள்ளலார் நகர், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மகேஷ் குமார் (21), பிரபல ரவுடி. பட்டாபிராம் காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்  பெற்றவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து, கடந்த ஜனவரி 28ம் தேதி மகேஷ்குமார் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்பு பட்டாபிராம் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடமிருந்து ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி ஆவடி அடுத்த அன்னம்பேடு, பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த கௌதம் (20) என்பவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை மகேஷ்குமாரும், சக ரவுடியான தண்டுரை, பள்ள தெருவைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பவரும் சேர்ந்து கல்லால் சரமாரி அடித்து கொல்ல முயன்றுள்ளனர்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சுரேஷ், மகேஷ்குமார் இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நேற்று காலை நன்னடத்தை உறுதிமொழியை  மீறியதாக ரவுடி மகேஷ்குமாரை பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து வந்தனர். அவரை துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் நன்னடத்தை உறுதிமொழியை மீறியதற்காக ஒரு ஆண்டில் தவறு செய்யாத நாட்களை கழித்து மீதமுள்ள 355 நாட்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதன் பிறகு, போலீசார் ரவுடி மகேஷ்குமாரை புழல் சிறையில் மீண்டும் நேற்று மதியம் அடைத்தனர்.

Tags : Rowdy ,jail ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...