×

பழவேற்காடு பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

பொன்னேரி, மார்ச் 11: பழவேற்காட்டில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ காவல் படையினரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.  இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,   திருவள்ளூரில் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இன்னும் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. முதியோர், குழந்தைகள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்லாமல் தவிர்க்க வேண்டும்.

கைகழுவும் பழக்கம் தான் இதற்கு ஒரே தீர்வு. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு திரும்புவோரை 24 நாள் முழு கண்காணிப்பில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், பொன்னேரி கோட்டாட்சியர் பெருமாள், வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ராஜேந்திர பாபு, மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி குழு பெருந்தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : rally ,area ,Pulicat ,
× RELATED அமெரிக்காவில் முக்கிய நகரங்கள்...