×

திருவாலங்காடு ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் இடத்தில் புதையல்?

திருத்தணி, மார்ச் 11: திருவாலங்காடு ஏரி அருகே வீரகோவில் மோட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்  திருவாலங்காடு ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு பெண் தொழிலாளி, “இங்கே கற்பூரம் வாசனை வருகிறது. இங்கு புதையல் உள்ளது. தோண்டி எடுத்துக் கொள்ளுங்கள். இது அம்மன் கட்டளை” என கூறியதாக தெரிகிறது. இதை நம்பி அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது, அங்கு பாறாங்கல் வந்தது. மேலும், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பெரிய அளவில் பள்ளம் தோண்டினர். அப்போது பெரிய கல் மட்டுமே வந்தது. இதனை கண்டு அவர்கள் விரக்தியடைந்தனர்.

Tags : Thiruvalngadu Lake Flood Canal ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...