×

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 200 பெண் குழந்தைகளுக்கு புதிய கணக்கு துவக்கம்

செய்யூர்,  மார்ச் 11: செய்யூரில் மகளிர் தினத்தையொட்டி அஞ்சல் துறை சார்பில்,  பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய கணக்கு துவக்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர் காலத்தை பாதுகாக்கும் வகையில் அஞ்சல் துறையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மதுராந்தகத்தை சேர்ந்த டாக்டர்கள் பிரவீன்குமார், தேன்மொழி ஆகியோர் இந்த செல்வமகள் திட்டத்தில் கீழ் 200 பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவங்க நன்கொடை வழங்கினர். இதன்மூலம் செய்யூர், செங்காட்டூர், இரும்பேடு, சித்தாமூர், காட்டு தேவத்தூர், ஓணம்பாக்கம், நுகும்பல், நீர்பெயர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 பெண் குழந்தைகளுக்கு புதிய கணக்கு துவங்கப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, அவர்களுக்கு கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நன்கொடை வழங்கிய மருத்துவர்கள், கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கணக்குப் புத்தகங்களை வழங்கி, அவர்களின் படிப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர்.செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா, மதுராந்தகம் உட்கோட்ட ஆய்வாளர் மணிகண்டன், செங்கல்பட்டு மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்