×

பெண் அதிகாரியிடம் ஆபாச பேச்சு காவல்துறை அமைச்சு பணி கண்காணிப்பாளர் மீது வழக்கு

சென்னை: சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் சீனியர் நிர்வாக அதிகாரியாக ரங்கநாயகி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அமைச்சு பணி கண்காணிப்பாளர் மோகன் என்பவருக்கும் இடையே பணி தொடர்பாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் மதியம் ரங்கநாயகி பணியில் இருந்த போது அவரது இருக்கைக்கு வந்த அமைச்சு பணி கண்காணிப்பாளர் மோகன் மிகவும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரங்கநாயகி இணை கமிஷனர் சுதாகரிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார். அதன்படி இணை கமிஷனர் விசாரணை நடத்தினார். அப்போது அமைச்சு பணி கண்காணிப்பாளர் மோகன் பணியில் இருந்த ரங்கநாயகியை ஆபாசமாக பேசியது ெதரியவந்தது.அதைதொடர்ந்து இணை கமிஷனர் உத்தரவுப்படி எழும்பூர் போலீசார் அமைச்சு பணி கண்காணிப்பாளர் மோகன் மீது பெண்களுக்கு எதிரான தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : officer ,police superintendent ,
× RELATED நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை...