×

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 11: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர். கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் அரசுஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர்சங்க தஞ்சைகோட்ட துணைத்தலைவர் கணேசன், ஜெயராஜ், ஜெயராம், செல்வராணி, இளங்கோ உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக ரோஸிவெண்ணிலா பொறுப்பேற்றதில் இருந்து பழிவாங்கும் வகையில் செயல்பட்டுவருகிறார். போராட்டம் நடத்தியசெவிலியர்கள், தலைமை மருந்தாளுனர் என 5பேரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்த 8மாதத்திற்கு பிறகு பணிக்கு திரும்பியபோது அதையும் ஏற்றுக்கொள்ள மனமின்றி தொலைதூர மாவட்டங்களுக்கு பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை வன்மையாக கண்டிப்பதுடன், தண்டனைகளை திரும்பப்பெறவும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாக்கப்படவும், தமிழக அரசு தலையிட்டு சுமூகதீர்வுகாண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 12ம்தேதி (நாளை) மாலை 5மணிக்கு கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Tags : Protests ,Government Medical College ,
× RELATED அரசுக்கு எதிரான போராட்டங்களில்...