×

காவிரிபாதுகாப்பு குழு கோரிக்கை புதுப்பொலிவுடன் திகழும் அரசு அருங்காட்சியகம்


கரூர், மார்ச் 11: கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியகம் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் பழமை வாய்ந்த பொருட்கள் இதில் வைக்கப்பட்டு அனைவரும் பார்வையிட்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுவதற்கு முன்பு, கரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டது. தற்போது 10 ஆண்டுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. போதிய பராமரிப்பு குறைவு காரணமாக, அருங்காட்சியகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இதனை சொந்த கட்டிடத்திற்கு மாற்றி, அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்திட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அருங்காட்சியக வளாகம் முழுதும் புதிதாக வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அருங்காட்சியக கமிஷனர் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதால் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களுக்கு மத்தியில், அருங்காட்சியகத்துக்கு என புதிய கட்டிடம் கட்டி அங்கு இதனை மாற்றி மேலும் புதுப்பொலிவுடன் செயல்பட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுநல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Government Museum ,Security Council ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...