×

நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல் கொரானோ வைரஸ் தொடுதலால் பரவக்கூடியது அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்


கரூர், மார்ச் 11: கொரானோ வைரஸ் தொடுதலால் பரவக்கூடியது எனவே நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வவு முகாம் அட்லஸ்கலையரங்கில் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். கலெக்டர் பேசுகையில், மழை, வெள்ளம், புயல், பூகம்பம்போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மூலம் மாதிரிஒத்திகை நிகழ்ச்சிநடைபெற உள்ளது.

மழைக்காலங்களில் சாலையிலோ, காவிரி ஆற்றின்கரைகளிலோ தண்ணீர்வரும் வேகத்தை அறியாமல் கடக்க முயலக்கூடாது. கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றுப்பகுதிகளில் நீரில்சிக்கி உயிரிழக்கும் அளவிலான சம்பவங்கள் நடந்ததற்கு நீரின் வேவகத்தை அறியாமல் ஆற்றில் இறங்கியதே காரணமாக அமைந்திருக்கிறது. பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின்சார்பில் பல்வேறு வழிகளில் போதிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரானோ எனப்படும் வைரஸ் என்பது காற்றில் பரவக்கூடியது அல்ல. மாறாக தொடுதலால் பரவக்கூடியதாகும்.

நாம் அன்றாடம் பல்வேறு காரணங்களுக்காக வெளியில்செல்லும்போது பயன்படுத்துகின்ற கழிப்பறைகள், கைகழுவும் இடங்கள், இருக்கைகள் என நாம் தொடும்நிலையில்உள்ள அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தொற்று உள்ள ஒருவர் பயன்படுத்திய பொருட்களில் சுமார் 48மணிநேரத்திற்கு இந்த வைரஸ் உயிருடன் இருக்கும். எனவே நாம் பொதுஇடங்களுக்கு செல்லும்போது வாஷ்பேஷன், இருக்கைகள் போன்றவற்றில் நாம் தொடும்போது, சுத்தமாக கைகளை கழுவிவிட வேண்டும்.

கைகளை நன்றாக கழுவிய பின்னரே நமது மூக்கு மற்றும்முகங்களில் கைகளை வைக்க வேண்டும். ஏனென்றால் தொற்றுஏற்பட்டால் வைரஸ் தாக்குதலால் சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும். பேரிடர் காலங்களில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து உங்களுக்கு வழங்கப்படும் மாதிரி நிகழ்ச்சியை அனைவரும் புரிந்துகொண்டு மற்றவருக்கும் எடுத்துரைக்கவேண்டும் என்றார். பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள முதல், முதல்நிலை தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு அடையாள உடைகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை,கோவை சத்ய சாய்சேவா சங்கம், கொங்கு கலைஅறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர்படையினரின் சார்பில பேரிடர் காலங்களில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்டிஓ சந்தியா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் விவேகானந்தன், அட்லஸ்நாச்சிமுத்து, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், இந்திய செஞ்சிலுவை சங்க கரூர் மாவட்டகிளை தலைவர் ஜோசப், தாசில்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : commissioner ,area ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...