×

செய்யாறு அருகே பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

செய்யாறு, மார்ச் 11: செய்யாறு அருகே பைக் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன்(23), டிரைவர். இவர் நேற்று மதியம் 12.45 மணி அளவில் பைக்கில் செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பாராசூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் கல்லூரியின் உள்ளே சென்றபோது எதிர்பாராதவிதமாக எழில்வேந்தன் பைக் மீது பஸ் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். செய்யாறு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட எழில்வேந்தன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து வந்தவாசி தாலுகா பிருதூர் கிராமத்தை சேர்ந்த தனஞ்செழியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தின்...