×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்: திருவண்ணாமலையில் நடந்தது


திருவண்ணாமலை, மார்ச் 11: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்ைதயை உடனே நடத்தக்கோரி, தொழிற்சங்க கூட்டமைப்பினர் மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில், அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் தொமுச, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொமுச மாநில செயலாளர் க.சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான பற்றாக்குறையை சரி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். 240 பணி முடித்த அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அரசே பென்ஷன் வழங்க வேண்டும். மேலும், நிர்வாகம் செலவு செய்த தொழிலாளர்களின் பணம் ₹5 ஆயிரம் கோடியை உடனே திரும்பத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Trade union federation ,
× RELATED கடைகளுக்கு விடுமுறை அளித்து 100 சதவீதம்...