×

ராணுவவீரர் மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மின்வாரிய அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

அணைக்கட்டு, மார்ச் 11: அணைக்கட்டில் ராணுவ வீரர் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மின்வாரிய இளநிலை பொறியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அணைக்கட்டு அடுத்த ஊசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி(31). இவர் அணைக்கட்டு மின்வாரிய அலுவலகத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு சென்று வந்தபோது இளநிலை பொறியாளர் சந்திரேசேகர் என்பவர் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள், போலீசாரிடம் அப்பெண் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

அவருக்கு ஆதரவாக பாமகவினரும் சென்று முறையிட்டதை தொடர்ந்து இளம்பெண் மற்றும் இளநிலை பொறியாளர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார் கடந்த 8ம் தேதி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்நிலையில், இளம்பெண் மற்றும் இளநிலை பொறியாளர் சந்திரசேகர் ஆகியோரை எஸ்பி அலுவலகத்திற்கு வரவழைத்து டிஎஸ்பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இதில் இளம்பெண்ணுக்கு, சந்திரசேகர் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதற்கு அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சுமித்ரா, தீபா, போர்மேன் ராமலிங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, சந்திரசேகர் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் அணைக்கட்டு போலீசார், அவர்கள் 4 பேர் மீதும் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sexual harassment ,army soldier ,
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...