×

ஏரி ஷெட்டர் கம்பி திருடியவர் கைது

முஷ்ணம், மார்ச் 11: விருத்தாசலம் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகம் முஷ்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் 22 ஏரிகள் அமைந்துள்ளது. மழை காலங்களில் மழைநீர் வெளியே செல்லாமல் இருக்கவும், விவசாயத்திற்கு தேவைப்படும்போது உபரி நீரை திறக்கவும் இந்த ஏரிகளில் ஷெட்டர் கம்பி பலகை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணித்துறை பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இன்நிலையில் நேற்று ஆனந்தகுடி பகுதியில் ஏரியின் நீர் பாசனத்திற்கு செல்லும் ஷெட்டர் கம்பிகளை மர்ம நபர் திருடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து முஷ்ணம் பொதுப்பணி நீர்வளதுறை பிரிவு அலுவலர் ரவிசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் முஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் கம்பி திருடியவர்கள் டி.வி.புத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிவாசகன் (31) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் திருட்டுபோன கம்பிகளை பறிமுதல் செய்தனர். 

Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது